» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கான் மாணவிகள் பள்ளி செல்ல அனுமதியுங்கள்: தாலிபான்களை வலியுறுத்திய மலாலா!

செவ்வாய் 19, அக்டோபர் 2021 11:46:29 AM (IST)

ஆப்கானிஸ்தான் நாட்டில் மாணவிகள் கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என  தாலிபான்கள் அரசை  மலாலா வலியுறுத்தியுள்ளார். 

தாலிபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது. இதனை அடுத்து கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை ஆப்கன் தாலிபான்கள் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட கடுமையான ஷரியா சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் தாலிபான்கள் கடந்த ஆட்சியில் பெண் கல்வி குறித்த கடுமையான இஸ்லாமிய சட்டங்களை தற்போது பின்பற்ற போவதில்லை என்று முன்னதாக உறுதிபடத் தெரிவித்து இருந்தனர். இதனால் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கப்படும் என்று உலக நாடுகள் நினைத்த நேரத்தில் தற்போது தாலிபான்கள் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டுள்ளனர். அமெரிக்கப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் போர் நிலவிய காலத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. 

தற்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் மீண்டும் திரும்ப தாலிபான்கள் அனுமதித்துள்ள நிலையில், மாணவிகளுக்கு பள்ளி செல்ல தடை விதித்துள்ளது. இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எதிர்காலத்தில் அந்நாட்டில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று பல சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கத் துவங்கினர். தற்போது நோபல் பரிசு பெற்ற பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாய் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலாலா பள்ளி பயிலும்போது தாலிபான்கள் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து தாலிபான்களின் அடக்குமுறைக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வந்தார். தற்போது இடைநிலைப் பள்ளியில் மாணவிகள் பயில தாலிபான்கள் தடை விதித்திருப்பதை அவர் எதிர்த்துள்ளார். மாணவிகள் பள்ளி செல்ல தாலிபான்கள் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இஸ்லாமிய மார்க்கம் பெண்கள் கல்வி பெற தடை விதிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே ஆப்கானிஸ்தான் மட்டுமே தற்போது பெண் கல்வியை மறுத்து வருகிறது. ஜி20 நாட்டு தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்வியை ஆதரிக்க நிதி அளிக்குமாறு ஆப்கன் மனித உரிமை ஆணையம் அவசர கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு பல நாடுகள் ஒப்புதல் அளித்து இருந்தன. 24 வயதான மலாலா யூசுப்சாய் தான் நடத்திவரும் லாபநோக்கற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக 2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஆப்கானிஸ்தான் பெண்கள் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதன்மூலமாக ஆப்கானிஸ்தானில் மாணவிகளும் பள்ளி சென்று பாடம் பயில அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory