» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வாஷிங்டனில் உள்ள வீட்டை விற்பனை செய்தார் துணை அதிபர் கமலா ஹாரிஸ்

சனி 2, அக்டோபர் 2021 4:53:00 PM (IST)

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், வாஷிங்டனில் உள்ள தனது வீட்டை விற்பனை செய்தார். 

அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார். இவருக்கு இரண்டு படுக்கையறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு வாஷிங்டனில் இருந்தது. 2017-ம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கிய இந்த வீட்டை கமலா ஹாரிஸ் 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1.995 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்திருந்த கமலா ஹாரிஸ், அதன்பின் 1.85 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார். 

இவர் ஏற்கனவே சான் பிராஸ்சிஸ்கோவில் உள்ள அப்பார்ட்மென்ட்-ஐ 8.6 லட்சம் டாலருக்கு விற்பனை செய்திருந்தார். இந்த வீட்டை கமலா ஹாரிஸ் 1998-ம் ஆண்டு 2.99 லட்சம் டாலருக்கு வாங்கிருந்தார். கமலா ஹாரிஸ்க்கு இன்னும் சில வீடுகள் உள்ளன. 3,500 சதுர அடியில் 3.2 மில்லியன் மதிப்பிலான வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. தற்போது துணை ஜனாதிபதிக்கான வீட்டில் கமலா ஹாரிஸ் வசித்து வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory