» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பான் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு

புதன் 29, செப்டம்பர் 2021 3:47:49 PM (IST)



ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பானின் பிரதமராக சுகா பொறுப்பு வகித்து வந்தார். கரோனாவை கையாண்ட விதத்தில் அவர் மீது அதிருப்தி ஏற்பட்டது. அவரது அமைச்சரவையின் செல்வாக்கு மதிப்பீடு 30 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது. இதைத்தொடர்ந்து ஒரு ஆண்டு பொறுப்புக்கு பிறகு அவர் பதவி விலகினார்.

இந்நிலையில் ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலை இன்று நடத்தியது. இதில் தாரோ கோனோ, புமியோ கிஷிடா, சனாயி தகாச்சி, செய்க்கோ நோடோ ஆகியோர் போட்டியிட்டனர். இதில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியான புமியோ கிஷிடா வெற்றிபெற்றார். அவர் ஜப்பானின் புதிய பிரதமர் ஆகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory