» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோவிட் வைரஸ் பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும்: உலக சுகாதார அமைப்பு

செவ்வாய் 28, செப்டம்பர் 2021 5:29:48 PM (IST)

கோவிட் வைரஸ் பெருந்தொற்று பரவல் நீண்ட காலத்திற்கு தொடரும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் தொற்று, தற்போது வரை உலகையே உலுக்கி வருகிறது. இந்நிலையில், கோவிட் வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த பூனம் கெத்ரபால் சிங் தெரிவித்து உள்ளதாவது: கோவிட் வைரஸ் பெருந்தொற்று நீண்ட காலத்திற்கு பரவும். முதல், 2வது அலைகளின் போது ஏற்பட்ட நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி பயன்பாடு கோவிட் வைரசுக்கு எதிரான எதிர்ப்புத் திறனை அடைய உதவலாம். ஆனாலும், உலக நாடுகள் வலுவான பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

பொதுசுகாதாரத்தை முதன்மையான ஒன்றாக உலக நாடுகள் கருத வேண்டும். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவது கடுமையான சூழல்களில் மக்களைக் காக்க இன்றியமையாத ஒன்றாக அமையும். மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்தல் மட்டும் போதாது. தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை தவறாமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory