» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தானில் முகச் சவரம் செய்ய தடை: மீறினால் தண்டனை - தலிபான்கள் அதிரடி உத்தரவு

செவ்வாய் 28, செப்டம்பர் 2021 11:28:40 AM (IST)



ஆப்கானில் முகச்சவரம் செய்து கொள்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கின. இதையடுத்து, கடந்த 15-ம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிபான்கள் வசம் சென்றது. இதனால் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையே, தலிபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர். இந்நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை தலிபான்கள் விதித்துள்ளனர். முடிதிருத்தும் கலைஞர்களுக்கு  முகச் சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தலிபான் அரசின் மத போலீசார் தெரிவித்துள்ளனர். இதே மாதிரியான உத்தரவுகள் தங்களுக்கு கிடைத்துள்ளதாக தலைநகர் காபூலில் உள்ள முடிதிருத்தும் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களுக்கு தலிபான்கள் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தலைமுடி மற்றும் தாடியை வெட்டும்போது முடி திருத்தம் செய்யும் கலைஞர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் புகார் சொல்வதற்கான உரிமை இல்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory