» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானில் ஊரடங்கு செப் 30‍ம் தேதி வரை நீட்டிப்பு

வியாழன் 9, செப்டம்பர் 2021 5:34:53 PM (IST)

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றம் 18 இதர பகுதிகளில் ஊரடங்கு செப்டம்பர் இறுதி வரை நீட்டித்து, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

ஜப்பான் நாட்டில் 12-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் அறிவிக்கப்பட்ட கரோனா கால ஊரடங்கு படிப்படியாக பல பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஜப்பான் பிரதமர் கூறுகையில்,  கரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது, பல மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், மக்கள் கரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory