» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது: அகமது மசூத்

வியாழன் 9, செப்டம்பர் 2021 11:05:16 AM (IST)

தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்று கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் அந்நாட்டின் பெரும்பாலான பகுதி தலீபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. ஆனால் பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் தலிபான்களை எதிர்த்து போராடி வந்தது. இதனைத்தொடர்ந்து ஒட்டுமொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இதனிடையே இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர். தற்போது முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும் மற்றும் கொலை செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்றும் இது ஆப்கானிஸ்தான், பிராந்தியம் மற்றும் உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் ஆப்கான் தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தான் மக்களை தலீபான்களுக்கு எதிராக எழுச்சிபெறுவதற்கு அழைப்பு விடுத்த அவர், ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஷாங்காயின் அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SARC) மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற உலகளாவிய நிறுவனங்களையும் (OIC) தலீபான்களுடன் ஒத்துழைக்கக் கூடாது என்று அகமது மசூத் கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory