» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்!

வியாழன் 1, ஜூலை 2021 5:33:22 PM (IST)



கரோனா வைரஸிற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என்று உறுதி அளிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நேற்று நிறைவேறியது.

இந்தியாவுக்கு அமெரிக்க நிர்வாகம் உதவி வழங்க வேண்டும் மருத்துவ உபகரணங்களை இந்தியா பெறுவதற்கு அமெரிக்க அரசு உதவ வேண்டும் அமெரிக்காவில் உள்ள தனியார் துறையிடம் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் நன்கொடைகளை இந்தியா பெற அமெரிக்க அரசு உதவ வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை தீர்மானம் கூறுகிறது. இந்திய மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா துணை நிற்கும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை கலிபோர்னியா மாநில ஜனநாயக கட்சி உறுப்பினர் பிரட் சேர்மன் குடியரசுக் கட்சியினர் ஸ்டீவ் சா போட்டும் தாக்கல் செய்தனர். அமெரிக்க அரசு 10 கோடி டாலரும் அமெரிக்க தனியார் துறையில் இருந்து 40 கோடி டாலரும் இந்தியாவுக்கு உதவியாக அனுப்பப்பட்டு இருக்கிறது என்று அரசு மதிப்பீடுகள் கூறுவதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீர்மானம் கடந்த மே மாதம் இந்தியா இரண்டாவது வரலாற்று பேரலையில் சிக்கி இருக்கும் பொழுது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory