» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கோவேக்சின் தடுப்பூசி கொள்முதல் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தம்: பிரேசில் அறிவிப்பு

புதன் 30, ஜூன் 2021 10:19:37 AM (IST)

கோவேக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வற்கான ஒப்பந்தத்தை தற்காலிமாக நிறுத்தி வைப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பூசியின் 20 கோடி டோஸ்களை வாங்குவதற்காக பிரேசில் அரசு கடந்து பிப்ரவரி மாதம் சுமார் 32 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த்தில் கையெழுத்திட்டது. ஆனால் பிரேசில் நாட்டின் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசிக்கான இறக்குமதி கோரிக்கைகளை மறுத்தது. விரிவான ஆய்வுக்கு பிறகே பிரேசிலில் தடுப்பூசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் என்ற சூழல் உருவானது. இதன் காரணமாக ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை. 

இதற்கிடையில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே அதிபர் போல்சனாரோ கரோனாவை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் காட்டியதாக அவர் மீது கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அவருக்கு எதிரான முறைகேடு புகார் குறித்த விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், கோவேக்சின் 20 கோடி டோஸ்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ கெய்ரோகா அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory