» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இங்கிலாந்தில் ஜூலை 19-ம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும்: போரிஸ் ஜான்சன்

செவ்வாய் 29, ஜூன் 2021 12:14:38 PM (IST)

இங்கிலாந்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 19-ம் தேதியுடன் முழுமையாக நீக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.

உலக அளவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கடுமையான ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனாவின் 2-வது அலையால் அங்கு மீண்டும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

மேலும் பி.1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தொற்று அங்கு பரவி வருவது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கை அமல்படுத்தியது. கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சரியாக மேற்கொண்டால், இங்கிலாந்தில் ஜூன் 21 ஆம் தேதியோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

ஆனால் கரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் அந்த முடிவை இங்கிலாந்து அரசு ஒத்திவைத்த‌து. இந்நிலையில் இங்கிலாந்தில் தற்போது கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால், வரும் ஜூலை 19-ஆம் தேதியுடன் அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கி கொள்ளப்படும் என்றும் அதன் பிறகு அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று நம்புவதாகவும் போரிஸ் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory