» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து சேதம் - கடல் நீர் புகுந்தது - 20பேர் பலி!

சனி 31, அக்டோபர் 2020 12:38:29 PM (IST)துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்தன. கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவானது. இதனால் கடற்கரை ஓரமாக இருக்கும் இஸ்மிர் நகரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்மிர் பகுதியில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாகக் கடல் பகுதியில் ஆழமான சுழல் உருவாகி மினி சுனாமி போலக் கடல் அலைகள் வெளி வந்தன. இதனால் கடலோர பகுதிக்குள் வெள்ளம் புகுந்து, அப்பகுதி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. நிலநடுக்கம் மற்றும் கடல்நீர் உட்புகுந்ததால் மக்கள் மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாக அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவிலேயே இஸ்மிர் நகரத்தில் 2 ஆயிரம் பேர் தங்குவதற்கான டெண்ட் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 18 பேர் பலியாகினர். கடந்த 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 17,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory