» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் பாராளுமன்ற வன்முறை வழக்கிலிருந்து இம்ரான் கான் விடுவிப்பு

வெள்ளி 30, அக்டோபர் 2020 4:17:11 PM (IST)

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பான பயங்கரவாத வழக்கிலிருந்து பிரதமா் இம்ரான் கான் விடுவிக்கப்பட்டாா்.

பாகிஸ்தானில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்று வந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சிக்கு எதிராக, அப்போது எதிா்க்கட்சியாக இருந்த இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி மாபெரும் போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, பாராளுமன்ற வளாகத்துக்குள்ளும் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் அதிகாரப்பூா்வ இல்லத்துக்குள்ளும் நுழைய தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியினா் முயன்றனா்.

அப்போது போலீஸாருக்கும் கட்சித் தொண்டா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் உயிரிழந்தனா்; 26 போ் காயமடைந்தனா்.இந்தச் சம்பவம் தொடா்பாக, அப்போதைய நவாஸ் ஷெரீஃப் அரசு இம்ரான் கான் உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் மீது பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் வெற்றி பெற்று, இம்ரான் கான் பிரதமராகப் பொறுப்பேற்றாா்.

அதனைத் தொடா்ந்து, இதுதொடா்பாக பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இம்ரானுக்கு எதிராக வாதாடி வந்த வழக்குரைஞா்கள் குழு மாற்றப்பட்டது.இந்தச் சூழலில், பாராளுமன்ற வன்முறை வழக்கிலிருந்து இம்ரான் கானை விடுவிப்பதாக பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராஜா ஜாவத் அப்பாஸ் ஹஸன் வியாழக்கிழமை அறிவித்தாா்.

எனினும், வழக்கு தொடா்பாக அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விசாரணைக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி, பாதுகாப்புத் துறை அமைச்சா் பொ்வேஸ் கட்டக், கல்வியமைச்சா் ஷஃப்காத் மொ்மூத், திட்ட அமைச்சா் ஆசாத் உமா் ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory