» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட தடை நவ.14 வரை நீட்டிப்பு

வியாழன் 29, அக்டோபர் 2020 5:45:22 PM (IST)

கரோனா தொற்று பரவலால் வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வங்கதேசம் முழுவதும் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும், பள்ளிகளும் மார்ச் 17 முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில்  கல்வி நிலையங்களைத் திறப்பது தொடர்பாக பேசிய கல்வி அமைச்சர் திப்பு மோனி, "எதிர்வரும் சுகாதார அபாயங்களைக் கருத்தில்கொண்டு கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்டத் தடை நவம்பர் 14 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில் நிலவும் கரோனா தொற்று பாதிப்பு நிலையை ஆய்வு செய்து மறு அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டார்.கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் இதுவரை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory