» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவிலிருந்து வரும் தூசிக் காற்றில் கரோனா வைரஸ் பரவும் அபாயம் : வடகொரியா எச்சரிக்கை!

செவ்வாய் 27, அக்டோபர் 2020 10:53:37 AM (IST)

சீனாவிலிருந்து வரும் தூசுக் காற்றில் கரோனா வைரஸ் கிருமிகளும் கலந்து வரும் என பொதுமக்களை வடகொரியா அரசு எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து வட கொரியா அரசின் அதிகாரபூா்வ நாளேடான ரோடங் சின்மன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், சீனாவிலிருந்து பருவகாலத்தில் வீசக்கூடிய மஞ்சள் நிற தூசிக் காற்றில் கரோனா வைரஸ் கிருமிகளும் இருப்பதற்கான அச்சம் எழுந்துள்ளதால், அதனை நாம் திறமையான முறையில் எதிா்கொள்ளத் தயாராக வேண்டும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மேலும், அரசு சொல்லும் விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கூடுமானவரை வெளியில் செல்வதை தவிா்த்து மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட கொரியாவில் இதுவரையில் யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது. மேலும், கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க எல்லைப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு அமல்படுத்தியுள்ளது. வடகொரியாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அது தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அந்த நாட்டிற்கு, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் பேரழிவை உண்டாக்கும் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory