» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா அச்சம் இன்றி மக்கள் வாக்களிக்கலாம்- இலங்கை தேர்தல் ஆணைய தலைவர்

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 9:03:06 AM (IST)

கரோனா குறித்த அச்சம் இன்றி மக்கள் வாக்களிக்கலாம் என இலங்கை தேர்தல் ஆணைய தலைவர் கூறினார்.

இலங்கையில் 225 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வருகிற 5-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தத் தேர்தல் கரோனா தொற்று காரணமாக 2 முறை ஒத்தி வைப்புக்கு பிறகு தற்போது நடக்க இருக்கிறது. இலங்கையில் இன்னமும் கரோனா பாதிப்பு குறையாததால் மக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு தயக்கம் காட்டலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் பாதுகாப்பானவை என்றும், எனவே மக்கள் கரோனா குறித்த அச்சமின்றி வாக்களிக்கலாம் என்றும் இலங்கைத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில் "நடக்க இருக்கும் தேர்தலில் மக்கள் எந்தவித பயமுமின்றி அவர்களின் வாக்கை செலுத்தலாம். அதேசமயம் வாக்குச்சாவடிகளில் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளை வாக்காளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கடந்த தேர்தல்களில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போதைய புதிய நடவடிக்கைகளுடன் அறிமுகப்படுத்தப்படும்’’ எனக் கூறினார்.

நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்து தேசப்பிரியா நடத்தும் கடைசித் தேர்தல் என்பதும், அவர் வருகிற செப்டம்பர் மாதம் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory