» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

சனி 1, ஆகஸ்ட் 2020 11:33:22 AM (IST)அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 2 விமானங்கள் மோதிக் கொண்டதில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சால்டோட்னா விமான நிலையம் அருகே நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்ததைத் தவிர, மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் விமானத்தை தனியாக ஓட்டிச்சென்ற அலாஸ்கா மாகாண உறுப்பினர் கேரி நோப் உயிரிழந்தார்.
 
மற்றொரு விமானத்தில் 6 பயணிகள் இருந்தனர். அவர்களில் சால்டோட்னாவைச் சேர்ந்த பைலட் கிரிகோரி பெல்(57), கன்சாஸைச் சேர்ந்த டேவிட் ரோஜர்ஸ்(40), தென் கரோலினாவைச் சேர்ந்த காலேப் ஹல்சி(26), ஹீதர் ஹல்சி(25), ஓல்ட் மேக்கே ஹல்சி (24) மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து விாசரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory