» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா ஊரடங்கால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு : 5,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கர்ப்பம்

வெள்ளி 31, ஜூலை 2020 5:32:25 PM (IST)

மாலவி நாட்டில் கரோனா ஊரடங்கால் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாகவும், 5,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

தென்கிழக்கு ஆப்ரிக்க நாடு மாலவி. ஜாம்பியா, தான்சானியா, மொசாம்பிக் போன்ற நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் மாலவியில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுமார் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திருமணம் செய்யப்பட்டு, அவர்கள் கர்ப்பம் அடைந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதுமே மார்ச் 20ம் தேதி மாலவியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதுவரை அங்கு 3,664 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 99 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம், மாலவி நாட்டின் இளைஞிகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டதாக கல்வித் துறை இயக்குநர் பெனெடிக்டோ கொண்டோவ் தெரிவித்துள்ளார்.

கரோனா பொது முடக்கத்துக்கு முன்பேயே உலகத்தில் அதிக குழந்தைகள் திருமணம் நடைபெறும் நாடாக மாலவி இருந்தது. தற்போது கரோனாவால் இது மேலும் அதிகரித்துள்ளது.கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுமே, ஊரகப் பகுதிகளில் குழந்தைகள் திருமணம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த பொதுமுடக்கக் காலத்தில் மட்டும் சுமார் 5000 சிறுமிகளுக்கு திருமணம் முடிந்து கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்கிடையே, கிழக்கு மாவட்டமான மங்கோச்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள், மாலவியில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாத காலத்தில் மட்டும் 7,274 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு கர்ப்பமடைந்த சிறுமிகளின் எண்ணிக்கை 1,039 ஆக உள்ளது.  இதில் 166 சிறுமிகளின் வயது 10 முதல் 14 வயதுக்கு உள்பட்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory