» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கலிபோர்னியாவில் மகன் கண் முன்பே நீரில் மூழ்கி இறந்த ஹாலிவுட் நடிகை

செவ்வாய் 14, ஜூலை 2020 12:47:22 PM (IST)

கலிபோர்னியாவில் ஏரியில் மகனுடன் படகில் சென்ற ஹாலிவுட் நடிகை, நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தெற்கு கலிபோர்னியா உள்ள பிரு ஏரியில்  தனது 4 வயது மகனுடன் படகில் ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா சென்றுள்ளார்  . சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு படகில் சென்ற ஒருவர், ரிவேராவின் நான்கு வயது மகன் மட்டும் படகில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு நான்கு வயது சிறுவன் மீட்கப்பட்டார். பிறகுதான் படகில் சென்ற நயா ரிவேரா காணாமல் போனது தெரிய வந்தது. 

ஆரம்பத்தில் ரிவேராவைக் காப்பாற்ற காவல்துறையினர் முயன்றுள்ளனர். ஆனால் 24 மணி நேரம் ஆன பிறகும் கிடைக்காததால் நீரில் மூழ்கி ரிவேரா இறந்திருக்கலாம் எனச் சந்தேகித்தார்கள். இந்நிலையில் நடிகை நயா ரிவேராவின் உடல் ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் தற்கொலை முயற்சியோ அல்லது நயாவைக் கொல்வதற்கான முயற்சியோ எதுவும் நடைபெறவில்லை எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஏரியில் திடீரென நயா ரிவேரா மூழ்கியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

மகனுடன் நீரில் தத்தளித்த நயா ரிவேரா, கடைசியில் தனது மகனைக் காப்பாற்றிவிட்டு நீரில் மூழ்கியுள்ளார். படகில் இருந்து பார்த்தபோது தனது தாய் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததாக நான்கு வயது மகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளான். நயா ரிவேராவின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory