» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்: அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்

வியாழன் 25, ஜூன் 2020 4:29:36 PM (IST)

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக ஈரானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி வலியுறுத்தல்

அதிக அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஈரான் அரசுடன் சீனா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்த அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத பயன்பாட்டை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடையை இந்த 6 வல்லரசு நாடுகளும் திரும்ப பெற வேண்டும்.

ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. எனினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதற்காக மன்னிப்பு கேட்பதுடன், ஈரானுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் பேசிய ஹசன் ருஹானி இதுகுறித்து கூறுகையில் "அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இதற்காக அமெரிக்கா ஈரான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு அமெரிக்காவின் நடவடிக்கையால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கூறினார்.


மக்கள் கருத்து

உலகத்தை அறிந்தவன்Oct 9, 1593 - 06:30:00 AM | Posted IP 108.1*****

இந்த நாய்க்கு எதுக்கு மன்னிப்பு ??? அணு ஆயுதம் தயாரித்து தீவிரவாதிகளுக்கு சப்பளை செய்யும் நாடு தான் ஈரான் ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory