» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எங்களுக்கு எதிராக ஒரு சிறிய கூட்டம் செயல்பட முடியாது: ஜி 7 விவகாரத்தில் சீனா கடும் எதிர்ப்பு

வியாழன் 4, ஜூன் 2020 4:37:13 PM (IST)

எங்களுக்கு எதிராக ஒரு சிறிய கூட்டம் செயல்பட முடியாது என ஜி 7 குழுவில் இந்தியாவை சேர்க்க முயற்சிக்கும் அமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவை ஜி 7 குழுவில் சேர்ப்பதற்கு அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை கடுமையாக குற்றம் சாட்டி வருகிறது.இதனால் சீனாவிற்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அமெரிக்கா தீவிரமாக செய்து வருகிறது. உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த தேவையான விஷயங்களை அமெரிக்கா செய்து வருகிறது.அதன் ஒரு கட்டமாக ஜி7 மாநாட்டை பயன்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவும், ரஷ்யாவும் ஜி 7 நாடுகளில் இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை வைத்து உள்ளார்.  

அதோடு அவுஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ஜி 7 என்பது 7 நாடுகள் குழு ஆகும்.இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளது. இதில் தான் இந்தியா,ரஷ்யாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் மோடிக்கு டிரம்ப் நேற்று தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வருகையை எதிர்பார்க்கிறோம் என்று டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார். இந்தியாவும் இந்த அழைப்பை ஏற்றுள்ளது.இந்தியாவின் இந்த முடிவு சீனாவிற்கும் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. 

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறுகையில், அமெரிக்காவின் திட்டம் எங்களுக்கு புரிகிறது.உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது. ஆனால் அமெரிக்காவின் திட்டம் பலிக்காது. ஜி7 நாடுகள் என்பது உலகின் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும்.ஒரு மாநாடு என்பது உலகின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும். அமைதிக்கான உடன் படிக்கையை செய்ய வேண்டும்.ஆனால் அமெரிக்கா திட்டமிடும் ஜி7 மாநாடு அப்படி இல்லை. 

அமெரிக்காவின் மாநாடு திட்டம் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். இந்த மாநாடு எந்த வகையில் பரஸ்பர நம்பிக்கையின் மேல் கட்டப்படவில்லை. எங்களுக்கு உலக நாடுகளின் ஆதரவு இருக்கிறது. இதனால் ஒரு சிறிய கூட்டம் சீனாவிற்கு எதிராக செயல்பட முடியாது. சீனாவிற்கு எதிராக இப்படி சிறிய வட்டத்தை உருவாக்குவது தோல்வியில்தான் முடியும்.அப்படிப்பட்ட வட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற வாய்ப்பில்லை என்று சீனா கூறியுள்ளது. அதாவது இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை ஜி7 குழுவில் சேர்ப்பது எந்த விதத்திலும் வெற்றியை பெற்றுத்தராது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory