» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நாய்களால் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிய முடியும் - ஆய்வில் தகவல்!!

புதன் 3, ஜூன் 2020 12:29:01 PM (IST)நாய்களால் நிச்சயம் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிய முடியும் என்று லன்டணில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
 
லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது வீசும் வாடையை நுகர வைக்கப்படுகின்றன. பின் கரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பாதித்தவர்களை நுகர்ந்தே கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ப்ரிட்டன் அரசாங்கம் இதற்கென 5 லட்சம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ.4,73,53,285 ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்றை மிக எளிதில், அதிவேகமாக முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகளின் அங்கமாக இந்த சோதனை அமைந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நாய்கள், மருத்துவ பரிசோதனை நாய்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சில வகை புற்றுநோய், பார்கின்சன் நோய் மற்றும் மலேரியா போன்றவற்றை நுகர்ந்தே கண்டறிந்து விடும். அந்த வகையில் நாய்களுக்கு நோயின் வாடையை நுகர செய்து, பின் இருநீச்சல் குளங்களின் நீரில் ஒரு மேஜை கரண்டி சர்க்கரை கலந்து அவற்றை நுகர செய்ய வைத்து பயிற்சி அளிப்பது பலன் அளிக்கும் என நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் குழு தெரிவித்துள்ளது.

நாய்களால் நிச்சயம் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை கண்டறிய முடியும் என்றும் இந்த ஆய்வின் இரண்டாம் கட்ட பயிற்சிகளில் கரோனா பாதித்தவர்களை நாய்களை கொண்டு நுகர செய்து சோதனை செய்யப்பட இருக்கிறது. இதன் முடிவுகளை கொண்டு மேலும் சில நாய்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்பட உள்ளது. சோதனைகள் வெற்றியடையும் பட்சத்தில், ஒவ்வொரு நாயும் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 250 பேரை நுகர்ந்தே அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்துவிட முடியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory