» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 2 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சீனா!

புதன் 13, மே 2020 12:46:06 PM (IST)

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் 2 செயற்கைகோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அதே சமயம் சீனாவில் கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதனால் அந்த நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எனினும் அந்த நாடு முழுமையாக கரோனாவில் இருந்து மீண்டுவிடவில்லை. மீண்டும் கரோனா பாதிப்பு தீவிரமாகலாம் என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

இந்நிலையில் கரோனா அச்சத்துக்கு மத்தியில் சீனா நேற்று 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை சீனா அனுப்பி உள்ளது. வடமேற்கு மாகாணம் கான்சுவில் உள்ள ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory