» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் மகப்பேறு மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல்; 2 குழந்தைகள் உள்பட 16 பேர் பலி

புதன் 13, மே 2020 11:38:20 AM (IST)



ஆப்கானில் மகப்பேறு மருத்துவமனைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் பரவி வரும் கரோனா தொற்றால் 4 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  127 பேர் பலியாகி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அந்நாட்டில் வசித்து வரும் பயங்கரவாத குழுக்கள் அரசுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒன்றுமறியாத குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட குடிமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.  அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

நாள்தோறும் தாக்குதல் தொடரும் நிலையில், காபூல் நகரின் மேற்கே அமைந்த மகப்பேறு மருத்துவமனைக்குள் பயங்கரவாதிகள் சிலர் புகுந்தனர்.  அவர்களை போலீசார் தடுக்க முயன்றபோது, இரு தரப்புக்கிடையே பல மணிநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள், அவர்களின் தாயார்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட 16 பேர் பலியாகினர்.  சண்டை நடந்தபொழுது, குழந்தைகள் மற்றும் அவர்களின் தாயார்களை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து 100 பேர்  வெளியேற்றப்பட்டு விட்டனர்.  அவர்களில் 3 பேர் வெளிநாட்டினர்.  இந்த தாக்குதலில், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் என 15 பேர் காயமடைந்து உள்ளனர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டு விட்டனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory