» செய்திகள் - விளையாட்டு » உலகம்

 பிரிட்டனில் ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

திங்கள் 11, மே 2020 9:34:38 AM (IST)

பிரிட்டனில் ஜூன் 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சா்வதேச அளவில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 41 லட்சத்தைக் கடந்துள்ளது. அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,180,303-ஆக உள்ளது. 2,83,860 பேர் பலியாகியுள்ள நிலையில் 14,90,776 பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

பிரிட்டனை பொறுத்தவரை கரோனா வைரஸால் சுமார் 2 லட்சத்து 19 ஆயிரத்து 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 31 ஆயிரத்து 855 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், லண்டனில் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வர இது சரியான நேரம் அல்ல.  ஜூன் 1ஆம் தேதி முதல் சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளது என்றார். பிரிட்டனில் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory