» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கடுமையான சவாலை உலகம் எதிர்கொண்டு வெற்றி பெறும்: ராணி எலிசபெத் நம்பிக்கை

திங்கள் 6, ஏப்ரல் 2020 12:18:57 PM (IST)

கரோனாவால் ஏற்பட்டுள்ள கடுமையான சவாலை உலகம் எதிர்கொண்டு வெற்றி பெறும் என்று  பிரிட்டன் ராணி எலிசபெத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை தொட்டிருக்கிறது. உலக அளவில் இது  70 ஆயிரத்தை தொட்டுவிட்டது.  இந்நிலையில் மிகவும் அரிதான நிகழ்வாக ராணி எலிசபெத், தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 

கரோனா தொற்றினால், உலக நாடுகள் பலவும் சொல்லொணாத் துயரத்துக்கு ஆட்பட்டு, பல உயிர்களை இழந்து, பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஒரு சிக்கலான  நேரத்தில் இருக்கிறோம். பொதுவான பிரச்னையை எதிர்கொண்டுள்ளோம் என்று பிரிட்டிஷ் ராணி கூறினார். இந்த கடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை பெருமையோடு நினைவுகூரும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன். இந்த பேரிடரை எதிர்கொண்டு வெற்றி கண்டபின், இதுவரை நாம் கண்டிராத ஒரு பலமான தலைமுறையாக இருக்கும் என்று சொல்லலாம். 

சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி இந்த பேரிடரை நாம் வெற்றி கொள்வோம். நமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு கடுமையான நேரம் இது. சிலருக்கு இது துக்கத்தையும் சிலருக்கு பொருளாதார இழப்பையும் மிகப்பெரிய வலியையும் ஏற்படுத்தியுள்ளது. சவாலான நேரத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயம் அந்த நல்ல நாட்கள் மீண்டும் வரும், நாம் நமது நண்பர்களை மீண்டும் சந்திப்போம், நமது குடும்பத்துடன் நாம் இணைவோம், மீண்டும் சந்திப்போம் என்று அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory