» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியது

சனி 4, ஏப்ரல் 2020 10:52:29 AM (IST)

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சீனாவில் பாதிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று, மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படாததால் தனிமைப்படுத்துவதும், பரிசோதனை மேற்கொள்வதுமே உரிய மருந்து என உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுவரை உலகளவில் 1,099,711 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக அமெரிக்காவில் 2,77,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதுவரை 59,975 பேர் பலியாகியுள்ளனர். இதில், அதிகபட்சமாக இத்தாலியில் 14,681 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை 3,082 ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 229 ஆகவும் உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 86 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory