» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஊரடங்கு உத்தரவை மீறினால் சுட்டுக் கொல்லுங்கள்: ராணுவத்திற்கு பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி உத்ததரவு

வெள்ளி 3, ஏப்ரல் 2020 11:25:38 AM (IST)

"பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்களை சுட்டுக் கொல்லுங்கள்" என காவல்துறை, ராணுவத்திற்கு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன. கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை பெரும்பான்மையான நாடுகள் விதித்துள்ளன. 

இந்நிலையில் பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறும் மக்களை சுட்டுக் கொல்லுங்கள் என  போலீஸார் மற்றும் ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். பிலிப்பைன்ஸில் 2,633 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory