» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அடுத்த சில நாட்களில் கரோனா வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டும்: உலக சுகாதார அமைப்பு

வியாழன் 2, ஏப்ரல் 2020 12:19:51 PM (IST)

அடுத்த சில நாட்களில் உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது: உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்குகிறது. "கடந்த ஐந்து வாரங்களில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மற்றும் கடந்த வாரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

அடுத்த சில நாட்களில் உலகளவில் 10 லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் 50,000 இறப்புகளையும் நாங்கள் அடைவோம் என கூறினார். இந்தியாவில், மார்ச் 31 முதல் ஏப்ரல் 1 வரை 437 புதிய கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டில் மொத்த கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கையை 1,834 ஆகக் கொண்டுள்ளது, இதில் 1,649 செயலில் உள்ள பாதிப்புகள் மற்றும் 41 உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory