» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பு: அமெரிக்காவில் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு

புதன் 1, ஏப்ரல் 2020 12:14:40 PM (IST)

கரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா விழி பிதுங்கி நிற்கிறது. உலகளவில் அமெரிக்காவில் தான் தற்போது கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.  அமெரிக்காவில் கரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  865 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது பதிவாகியுள்ளது.  அமெரிக்காவில் திங்களன்று 8.30 மணி அளவில் 3,008ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, செவ்வாயன்று, 8.30 மணி அளவில் 3,873ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் தற்போது 1,88,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory