» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மோடி மன்னிப்பு கேட்டதை திரித்து கூறிய இம்ரான் கான்: திருத்திய பாகிஸ்தான் ஊடகம்

செவ்வாய் 31, மார்ச் 2020 4:31:39 PM (IST)

இந்திய மக்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதை திரித்து தவறான பொருள்படும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதை, பாகிஸ்தான் ஊடகம் சுட்டிக்காட்டி திருத்தி உள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்கள் தவிர பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்தியா போன்ற 130 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், கரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் மோடி கூறினார். 

இந்நிலையில் கரோனா குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, இந்தியாவில் கரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டார். அதனால்தான் பாகிஸ்தானில் நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்துவது மோசமான யோசனை என நினைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.  ஆனால் இம்ரான் கான் கூறியது தவறு எனவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கவில்லை என்றும் பாகிஸ்தான் ஊடகமான ‘ஜியோ நியூஸ்’ சுட்டிக் காட்டியது. மேலும் ஊரடங்கு உத்தரவு, சிந்திக்காமல் எடுத்த முடிவு என  மோடி கூறவில்லை என்றும் தெளிவுபடுத்தியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory