» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஜெர்மனி அமைச்சர் தற்கொலை

திங்கள் 30, மார்ச் 2020 8:47:57 AM (IST)

கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஜெர்மனி அமைச்சர் தற்கொலை செய்துள்ளது, அந்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனாவால் உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 199 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதியமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர். 54 வயதான இவர் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த 10 வருடங்களாக ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதித் தலைவராக இருந்த அவர், கடந்த சில மாதங்களாக கொரோனவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நிறுவனங்களுக்கும், அதன் தொழிலார்களுக்கும் இரவும் பகலுமாக உதவிக்கொண்டிருந்தார். இதனால் கடும் மனஉழைச்சலுக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காத்து கொள்ள வழி தெரியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். 

இவருடைய சடலம் நேற்று ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் கிடைத்தது. இத்தகைய சமயத்தில் தாமஸை போன்ற ஆட்கள்தான் அதிகம் தேவைப்படும்; அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என்கின்றனர் அவருடன் வேலை செய்யும் சக நண்பர்கள் மற்றும் அதிகாரிகள். இவருக்கு ஒரு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். கரோனாவால் ஏற்பட்ட விளைவுகளால் மிக முக்கியமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் தடவை ஆகும். இந்த சம்பவம் ஜெர்மனியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமஸ் ஸ்கேஃபர் தனது சக ஊழியர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தவர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory