» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு ரூ.21.7 கோடி நிதியுதவி : அமெரிக்கா அறிவிப்பு

ஞாயிறு 29, மார்ச் 2020 7:15:38 PM (IST)

உலகம் முழுவதையும் பாதித்துள்ள கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட, இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர்(ரூ. 21.7 கோடி) உட்பட, 64 நாடுகளுக்கு 174 மில்லியன் டாலர் (ரூ.130 கோடி) கூடுதல் நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

கரோனா தொற்று நோயின் அபாயம் அதிகம் உள்ள நாடுகளில், நோய் பரவுவதை கட்டுக்குள் வைக்க, இந்த கூடுதல் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான இந்த நிதியுதவி, ஆய்வகங்களை உருவாக்கவும், கரோனா பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியவும், தொழில்நுட்ப வல்லுநர்களை தயார்நிலையில் வைத்திருப்பதற்காகவும் வழங்கப்படுகிறது. இதேபோல், இலங்கைக்கு 1.3 மில்லியன் டாலர், நேபாளத்திற்கு 1.8 மில்லியன் டாலர் வங்கதேசத்திற்கு 3.4 மில்லியன் டாலர், ஆப்கானிஸ்தானிற்கு 5 மில்லியன் டாலர் அமெரிக்கா உதவி அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory