» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் தொற்று: சீனா, இத்தாலியை பின்னுக்குத்தள்ளியது அமெரிக்கா!!

வெள்ளி 27, மார்ச் 2020 11:31:51 AM (IST)

சீனா, இத்தாலியை பின்னுக்குத்தள்ளி உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அதிகம் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 83,672 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து சீனா  மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடைத்தை பிடித்துள்ளது.  

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நரத்தில் மேலும் 250 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, அந்த வைரஸுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,054-ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் கூடுதலாக 15,461பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்ப்பட்டுள்ளதால், நாட்டில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 83,672-ஆக உயா்ந்துள்ளது.

இதன் மூலம், சீனாவுக்கும் இத்தாலிக்கும் அடுத்தபடியாக உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை அதிகம் கொண்ட நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.  வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.  இதற்கிடையே, கரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, 220 கோடி டாலா் (சுமாா் ரூ.16,860 கோடி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கு டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory