» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரசை அம்பலப்படுத்திய டாக்டரின் மரணத்துக்கு மன்னிப்பு கேட்டது சீனா

சனி 21, மார்ச் 2020 11:00:51 AM (IST)

கரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரிக்கை விடுத்து, உயிரை பறிகொடுத்த சீன மருத்துவரின் குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவில் வூஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார். ஆனால், லி வென்லியாங்குக்கு சம்மன் விடுத்த சீன போலீஸார், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர். 

லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது.  இதில் லி வென்லியாங்கின் உயிரும் பறிபோனது. தற்போது உலகம் முழுவதும் 2,76,179 பேர் கோவிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,406 பேர் மரணமடைந்துள்ளனர். தொடர்ந்து கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், அவ்வைரஸ் குறித்த முதலில் எச்சரிக்கை விடுத்து, உயிரைப் பறிகொடுத்த மருத்துவர் லி வென்லியாங்கின் குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், லி வென்லியாங்கின் குடும்பத்திற்கு நிதி இழப்பீட்டையும் சீன அரசு வழங்கியுள்ளது.


மக்கள் கருத்து

saamiMar 22, 2020 - 08:10:05 PM | Posted IP 173.2*****

long live

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory