» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரசுக்கு எதிராக உலகமே போரில் ஈடுபட்டுள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து

வியாழன் 19, மார்ச் 2020 10:31:26 AM (IST)

கரோனா வைரசுக்கு எதிராக உலகமே போரில் ஈடுபட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கரோனா வைரசுக்கு 100 பேர் பலியானநிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரில் ஈடுபட்டுள்ளோம். நாம் மட்டுமின்றி, உலகமே போரில் ஈடுபட்டுள்ளது. கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும், உலகமே தெரிந்து கொண்ட ஒன்றாகி விட்டது. நிச்சயமாக அந்த எதிரியை வீழ்த்துவோம். அதற்காக எல்லா வளங்களையும் பயன்படுத்துவோம்.

இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்ட பிறகு, வழக்கமான பணிகளுக்கு விரைவில் திரும்பலாம். அதுவரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். உலகத்தில், பாதிப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் அமெரிக்காவை நிச்சயம் இடம் பெறச் செய்வேன். இந்த போரில் நாம் வெற்றிபெற காலதாமதம் ஆவது நல்லது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory