» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை, அவெஞ்சர்ஸ் பட நடிகருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு!

புதன் 18, மார்ச் 2020 10:54:29 AM (IST)

ஜேம்ஸ்பாண்ட் நடிகை, பட நடிகரையும்க்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவெஞ்சர்ஸ் பட நடிகரையும் கரோனா வைரஸ் நோய் தாக்கியது.

உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கரோனா வைரஸ் உலக தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை தாக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த வாரம் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் தனக்கும் தனது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சனுக்கும் கரோனா பாதிப்பு இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆப் சோலஸ்’, டாம் குரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவரின் உதவியை நாடியதாகவும், அதில் தனக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் ஓல்கா குரிலென்கோ இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா தனக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தனக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே வைரஸ் தாக்கியதாகவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் எச்சரிக்கையாகவும், நடைமுறைக்கேற்றவாறும் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.இதனிடையே கேம் ஆப் திரோன்ஸ் நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜுவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory