» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிப்பு

செவ்வாய் 17, மார்ச் 2020 8:53:26 AM (IST)

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா, இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளில் கரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. கரோனா வரைஸ் தடுப்பு நடவடிக்கையாக இலங்கையில் 3 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசியப் பணிகள் தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு  வரும் 19 ஆம் தேதி வரை  பொது விடுமுறை அளிக்கப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.  இலங்கையில் தற்போது வரை 21 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory