» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ்!

சனி 14, மார்ச் 2020 12:36:13 PM (IST)

பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தாய்க்கு நிமோனியா காய்ச்சல் என்று கருதப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தாயும் குழந்தையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கெனவே வடக்கு மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டபோதிலும் தாய்க்கு கரோனா பாதிப்பு இருப்பது குழந்தைப் பிறப்புக்குப் பிறகுதான் தெரியவந்தது. குழந்தை பிறந்தவுடனேயே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிறந்தவுடன் வைரஸ் தொற்றியதா, கருவிலேயே தொற்றியதா என்பதை அறிய மருத்துவக் குழுவினர் முயன்று வருகின்றனர். - உலகில் மிக இளம் வயதில் பாதிக்கப்பட்டவர் என்ற இடத்தைப் பெறுகிறது இந்தக் குழந்தை.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory