» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் நடைமுறை மிகவும் பாதுகாப்பாக உள்ளது : டொனால்ட் டிரம்ப்

வெள்ளி 13, மார்ச் 2020 10:36:43 AM (IST)இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் நடைமுறை மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். 

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் மற்றும் அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் ஆகியோர் சந்தித்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் எப்போதும் அடுத்தவருடன் கை குலுக்கும் பழக்கத்தை பெரிதாக வைத்துக் கொண்டதில்லை. இருப்பினும் அதிபரான பிறகு மற்ற தலைவர்களை சந்திக்கும் போது மரியாதை நிமித்தமாக கை குலுக்க வேண்டியிருந்தது. 

ஆனால், நானும், அயர்லாந்தின் பிரதமரும் சந்தித்தபோது கை குலுக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்தோம்? இது ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தியது. அப்போது தான் நான் இந்தியாவில் கற்றுக்கொண்ட பாரம்பரியமான இரு கைகளையும் இணைத்து வணக்கம் தெரிவிக்கும் முறையைப் பின்ற்றினேன். பதிலுக்கு அவரும் அதைச் செய்தார். இந்தியாவில் இருந்து நான் திரும்பியது முதல் ஒருவரை வரவேற்க நான் இந்தியாவின் வணக்கம் தெரிவிக்கும் நடைமுறையைத் தான் பின்பற்றி வருகிறேன். 

இது மிகவும் எளிமையாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. கால்பந்து உள்ளிட்ட இதர விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டு வருவது போன்று ஒலிம்பிக் போட்டிகளும் குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். அதிகளவில் மக்கள் கூடுவதால் இம்முடிவை எடுப்பது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து என்று தெரிவித்தார். ஐரோப்பாவில் தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்றின் தாக்கம் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அயர்லாந்து பிரதமர் லியோ தெரிவித்தார்.


மக்கள் கருத்து

சேகர்Mar 19, 2020 - 03:39:58 PM | Posted IP 173.2*****

மதம் - உயிரை குடிக்கும் விஷம், மூடநம்பிக்கை, வைரஸ்

உண்மைMar 16, 2020 - 04:40:25 PM | Posted IP 108.1*****

இங்கு மத மாறிய மேலை நாட்டு அடிமைகள் என்னமா கூவுது!

மக்கள்Mar 14, 2020 - 10:54:10 AM | Posted IP 108.1*****

இந்திய கலாச்சார பெருமையை சொன்னால் இந்த (அப்படியா) மத வெறி பயலுகளுக்கு ஏன் வலிக்குது

தமிழ்ச்செல்வன்Mar 14, 2020 - 10:14:44 AM | Posted IP 108.1*****

கை கூப்பி வணக்கம் சொல்வது இந்திய கலாச்சாரமும் அல்ல, இந்து கலாச்சாரமும் அல்ல. அது தமிழன் கலாச்சாரம்.

அப்படியாMar 14, 2020 - 07:05:30 AM | Posted IP 162.1*****

மோடி கனடா பிரதமர் ஐ சந்திக்க போகும்போது அவர் மனைவியை கை குலுக்க நீட்டுனாராம் அது உண்மை என்ற சங்கியின் கலாசாரம்

அப்படியாMar 14, 2020 - 07:04:05 AM | Posted IP 162.1*****

ஏற்கனவே ஜப்பானியர் கைகுலுக்காமல் குனிந்து வணக்கம் சொல்லுவார்கள்.. உண்மை என்ற சங்கி பயக்கு உலகமே தெரியாதாம்

உண்மைMar 13, 2020 - 12:58:41 PM | Posted IP 108.1*****

இந்து கலாச்சாரம் என்றும் சிறந்தது! ஜெய்ஸ்ரீராம்! ஜெய்ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory