» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடா பிரதமர் மனைவிக்கு கரோனா வைரஸ்: மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது

வெள்ளி 13, மார்ச் 2020 10:24:23 AM (IST)



கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபி கிரிகோயர் ட்ரூடோவுக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் இருந்து திரும்பிய போது காய்ச்சல் பாதிப்புடன் காணப்பட்டார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது உடல்நலனில் அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் சோபி ட்ரூடோ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் பூரண நலமடைந்து திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory