» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அதிபர் டிரம்புக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதா? வெள்ளை மாளிகை விளக்கம்

புதன் 11, மார்ச் 2020 12:41:49 PM (IST)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கரோனா வைரஸுக்கான பரிசோதனைகளை செய்து கொள்ளவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்ற ஒரு நபருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நபர் கலந்து கொண்ட அதே மாநாட்டில் பல அமெரிக்க எம்.பிக்களும் பங்கேற்றனர். அதனால் தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் எம்.பிக்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்குள்ளேயே மருத்துவர்கள் கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

இந்த எம்.பிக்களில் ஒருவரான ஜியார்ஜியாவை சேர்ந்த டக் கோலின்ஸுடன் அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கைகுலுக்கினார். மேலும் மற்றொரு எம்.பியான பிளோரிடாவை சேர்ந்த மாட் கேட்ஸுடன் ஏர் ஃபோர்ஸ் விமானத்தில் அதிபர் டிரம்ப் ஒன்றாக பயணித்தார். இதன் காரணமாக அதிபர் டிரம்புக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமா? அவருக்கு கரோனா உள்ளதா என்று பரிசோதனைகள் செய்யப்பட்டதா? என கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஸ்டெப்பானி கிரிஷாம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்: தனிமைப்படுத்தப்பட்டுள்ள எம்.பிக்களுடன் அதிபர் டிரம்ப் நீண்ட நேரம் செலவிடவில்லை. மேலும் அதிபர் டிரம்பிடம் கரோனா வைரஸுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. அவர் ஆரோக்கியமாக உள்ளார். அதனால் அவருக்கு கரோனா வுக்கான பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதிபர் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவரது மருத்துவர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என ஸ்டெப்பானி கிரிஷாம் கூறினார். முன்னதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப் கரோனா வைரஸ் பரவலை தடுக்க தனது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களையும் அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.

சொகுசு கப்பல் பயணிகள் வெளியேற்றம்

தி கிராண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணித்த 3500 பேரில் 21 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் கப்பல் சான் பிரான்சிஸ்கோ கடல் பகுதியேலேயே கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள துறைமுகத்திற்கு வந்தடைந்த. சொகுசு கப்பலில் உள்ளவர்களை வெளியேற்றுவதற்காக அவசரகால ஊழியர்கள் முகமுடி, கையுறைகள் அணிந்து தயார் நிலையில் காத்திருந்தனர். கப்பல் வந்தவுடன் முதல்கட்டமாக கரோனாவால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிகிச்சை தேவைப்படுவோர் ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டனர். இரண்டாம் கட்டமாக கலிபோர்னியாவை சேர்ந்த 900 பயணிகள் வெளியேற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் அனைவருக்கும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அவர்கள் 14 நாட்கள் அமெரிக்க படைத்தளங்களில் உள்ள முகாம்களில் தனிமையில் வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பரவியுள்ள சொகுசு கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துறைமுகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory