» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா பீதி: இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கத்தார் அரசு தடை!!

திங்கள் 9, மார்ச் 2020 5:09:50 PM (IST)கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா உட்பட 14 நாடுகளை சேர்ந்தவர்கள் கத்தாரில் நுழைய அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இந்தியா,  சீனா, தென் கொரியா, வங்கதேசம், எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை, சிரியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கத்தார் தடை விதித்துள்ளது. கத்தாரில் கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் கத்தார் ஏர்வேஸ் இந்தியாவில் தன் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. முன்பு இத்தாலி நாட்டுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் இந்தியா மற்றும் 6 நாடுகளுக்கான விமான சேவையை குவைத் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory