» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கராச்சி கட்டட விபத்து : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்வு

திங்கள் 9, மார்ச் 2020 12:50:13 PM (IST)பாகிஸ்தானின் கராச்சி நகரில் 3 அடுக்கு குடியிருப்புக் கட்டடம் கடந்த இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27-ஆக உயா்ந்துள்ளது.

கராச்சியின் குல்பகாா் பகுதியில் இருந்த அந்த கட்டடம் மார்ச் 5ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானதில் 14 பேர் பலியாகினர். 17 பேர்காயமடைந்தனர். தொடர்ந்து நடந்து வரும் மீட்புப் பணியில் கடந்த சனிக்கிழமை, ஒரு சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டான். மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று 8 உடல்கள் மீட்கப்பட்டன. முற்றிலும் இடிபாடுகளை அகற்ற மேலும் நான்கு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இடிந்து விழுந்த அந்தக் கட்டடம், அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதும், கட்டடம் இருக்கும் இடம் குறுகிய சாலைகளைக் கொண்டதால் மீட்புப் பணியில் மிகப்பெரிய இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory