» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோன அச்சுறுத்தல் எதிரொலியாக இந்தியர்களுக்கு தடை : குவைத் அரசு அறிவிப்பு

சனி 7, மார்ச் 2020 5:29:50 PM (IST)

இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு தடை விதித்து குவைத் அரசு உத்தரவிட்டுள்ளது. குவைத் அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் தடை பற்றிய அறிவிப்பு வெளியானது.

வங்கதேசம், பிலிப்பைன்ஸ், இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தியா, லெபனான், எகிப்து ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் குவைத் வருவதற்கு தடை விதிப்பது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால் இந்த ஏழு  நாடுகளிலும் உள்ள குவைத்  குடிமக்கள் குவைத்  நாட்டுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக் கோழிக்கோடு, கரிப்பூர் விமான நிலையங்களில் இருந்து இன்று குவைத்துக்கு புறப்பட இருந்த விமான சேவைகள ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானக் கம்பெனிகள் சார்பில் பயணிகளுக்கு அவர்களது மொபைல் போன்களில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். .கரிப்பூரில் 170 பயணிகள் குவைத் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory