» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக அளவில் கணக்கிடும் போது அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறைவே: டிரம்ப்

சனி 7, மார்ச் 2020 4:28:30 PM (IST)

உலக அளவில் கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தாக்கி உள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் 17 பேர் கரோனாவில் பலியாகி உள்ளனர். 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் கரோனா பாதிப்பு குறைவே என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் கூறும் போது, "ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory