» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

வெள்ளி 6, மார்ச் 2020 4:53:40 PM (IST)கரோனா வைரஸ்க்கு எதிராக உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு தலைவர் கவலை தெரிவித்து உள்ளார்.

சீனா யுகான் நகரில் தோன்றிய கரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை  98,424 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் மட்டும் 3042 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும்  3,386 பேர் பலியாகி உள்ளனர். 55,638  பேர் இந்த நோயில் இருந்து குணமாகி உள்ளனர். இந்தியாவில் 31 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும்  கரோனா  6 கண்டங்கள் மற்றும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் தன் கோர முகத்தை காட்டி உள்ளது. கொரோனாவால் சர்வதேச வணிகம், சுற்றுலா, விளையாட்டு நிகழ்வுகள், கல்வி  என  பல விஷயங்களை முடங்கி உள்ளது . 

ஆனால் இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் உலக நாடுகள் முறையாக தயாராகவில்லை  என்று உலக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சில நாடுகள் சுணக்கம் காட்டுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம்  கூறியதாவது:-கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது, ஒத்திகை அல்ல. கரோனா பாதிக்கப்பட்டவர்களில் உலகம் முழுவதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இது பருவகால காய்ச்சலின் இறப்பு எண்ணிக்கையை விட அதிகமான இறப்பு விகிதமாக உள்ளது. கரோனா பாதிப்பின் தீவிரம் தெரிந்தும், உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதவில்லை. இந்த கரோனா தொற்று ஒவ்வொரு நாட்டிற்கும், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் என பாகுபாடின்றி அச்சுறுத்தலாக உள்ளது என்பதை உணர வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் அரசு தலைவர்களும் கொரோனவை கட்டுப்படுத்தும் பொறுப்பை சுகாதார அமைச்சகங்களிடம் மட்டும் விடாமல், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் என கூறினார்.

அதே போல கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிகிதம்  பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. ஒரு சிலருக்கு லேசான அறிகுறி கூட இல்லாமல் கரோனா உடலில் பரவியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கரோனா விவகாரத்தில் அனைத்து நாடுகளும் செய்யவேண்டிய ஒரே செயல் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, துரிதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தயாராக இருப்பதே என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory