» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா வைரசை கட்டுப்படுத்த 12 பில்லியன் டாலர் நிதியுதவி : உலக வங்கி முடிவு

புதன் 4, மார்ச் 2020 4:24:10 PM (IST)

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது. 

சீனாவை தாக்கிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.87 ஆயிரம் கோடி (12 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளது. இந்த பணம் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு நிதி உதவியாக வழங்கப்பட உள்ளது.

இது குறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியதாவது: கரோனா வைரஸ் பாதிப்பால் ஏழை நாடுகள் மேலும் நிதிச்சுமைக்கு ஆளாகி உள்ளன. எனவே அந்த நாடுகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலம் கரோனா நோய் பரப்பும் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான மருந்துகள் மற்றும் சுகாதார பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்க நிதி பயன்படுத்தப்படும். நிதி உதவி அதி விரைவில் வழங்கப்படும். இதன் மூலம் பல மனித உயிர்கள் காப்பாற்றப்படும். இதற்கு முன்பு எபோலா, ஷிகா வைரஸ் நோய்களின் தாக்கத்தின் போதும் உலக வங்கி இது போன்று நிதி உதவி வழங்கியுள்ளது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory