» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போப் பிரான்சிசுக்கு சாதாரண ஜலதோஷம்; கரோனா பாதிப்பு இல்லை - மருத்துவ அறிக்கை

செவ்வாய் 3, மார்ச் 2020 5:43:20 PM (IST)

போப் பிரான்சிசுக்கு  சாதாரண ஜலதோஷம், கரோனா பாதிப்பு இல்லை என மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இத்தாலியில் உள்ள வாடிகன் நகரில் கடந்த வாரம் மக்களுடன் பிரார்த்தனையில் ஈடுபடும் நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் (வயது 83) பங்கேற்றார். அப்போது அவர் கடுமையான இருமல், ஜலதோ‌‌ஷத்தால் அவதியுற்றார். இதையடுத்து, மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை போப் பிரான்சிஸ் ரத்து செய்தார். மேலும், அவர் லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூய்னி தெரிவித்தார்.

இதனால் கரோனா வைரஸ் குறித்த அச்சம் எழுந்தது. உடனடியாக போப் பிரான்சிசுக்கு கரோனா குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் போப் பிரான்சிசுக்கு கரோனா பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வந்துள்ளது சாதாரண ஜலதோஷம் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இன்னும் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


மக்கள் கருத்து

உண்மைMar 10, 2020 - 01:12:06 PM | Posted IP 162.1*****

கைப்புள்ளக்கே இந்த அடின்னா இவனுக சங்க ஆளுங்க நிலைமை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory