» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் கோர விபத்து: பேருந்து மீது ரயில் மோதியதில் 20 பேர் பலி

சனி 29, பிப்ரவரி 2020 10:52:22 AM (IST)பாகிஸ்தானில் பேருந்து - ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருந்து சர்கோதா நகரம் நோக்கி 50-க்கும் அதிகமான பயணிகளுடன் நேற்று இரவு பேருந்து  ஒன்று  சென்று கொண்டிருந்தது. சிந்து மாகாணம் சுக்குர் மாவட்டம் ரோரி பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை அந்த பேருந்து கடக்க முயன்றபோது அந்த தண்டவாளத்தில்,  ராவல்பிண்டியில் இருந்து கராச்சி நோக்கி மின்னல்  வேகத்தில் வந்துகொண்டிருந்த பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. ரயிலின் என்ஜினில் சிக்கிய பேருந்து 150- 200 அடி தொலைவுக்கு இழுத்துச்செல்லப்பட்டது. 

பேருந்தில் சிக்கிய பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர். இந்த  கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 20 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர்,  படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory