» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அரச குடும்பத்தில் இருந்து விலகிவிட்டேன்; இளவரசர் என அழைக்காதீர்கள் - ஹாரி வேண்டுகோள்

வெள்ளி 28, பிப்ரவரி 2020 4:59:22 PM (IST)

அரச குடும்பத்தில் இருந்து விலகியதால்  தன்னை இனி இளவரசர் என யாரும் அழைக்க வேண்டாம் என்று ஹாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து, ராணி 2-ம் எலிசபெத்தின் ஒப்புதலோடு அவர்கள் கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறியுள்ளனர். எனினும் ஹாரி-மேகன் தம்பதி அரச பொறுப்புகளையும், பட்டங்களையும் முழுமையாக துறக்கவில்லை. அடுத்த மாதம் 31-ந்தேதி அவர்கள் அரச குடும்பத்தில் இருந்து முறைப்படி வெளியேறுகிறார்கள்.

அதற்கு முன்னர் அரச குடும்ப உறுப்பினர்களாக ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர்கள் சம்மதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நடைபெற்ற சுற்றுலா மாநாடு ஒன்றில் ஹாரி கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய ஹாரி, தன்னை இனி, அரச குடும்ப அடைமொழியோடு அதாவது இளவரசர் என யாரும் அழைக்க வேண்டாம் என கூறினார். அந்த நடைமுறையை முழுமையாக கைவிடுமாறு வலியுறுத்திய அவர், தனது பெயரை குறிப்பிட்டு மட்டுமே அழைத்தால் போதும் என்று அன்போடு கேட்டுக்கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory